லைஃப்ஸ்டைல்

வறண்ட சருமத்திற்கான டிப்ஸ்...

Published On 2018-10-17 03:40 GMT   |   Update On 2018-10-17 03:40 GMT
பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.
பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.

* தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.

* வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.

* ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம்.

* கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

* பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.

* பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.
Tags:    

Similar News