பெண்கள் உலகம்

வீட்டிலேயே ஃபலூடா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Published On 2019-04-12 12:04 IST   |   Update On 2019-04-12 12:04:00 IST
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃபலூடா ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :

பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி

ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :

வேகவைத்த சேமியா - 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் -3



செய்முறை :

முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.

அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்

பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.

பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.

சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News