பெண்கள் உலகம்

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டர் முறுக்கு

Published On 2019-02-09 14:01 IST   |   Update On 2019-02-09 14:01:00 IST
தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 மேசைக் கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 5 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை :

எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.

முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.

சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.

இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News