லைஃப்ஸ்டைல்

புளிப்பொங்கல் செய்வது எப்படி?

Published On 2018-10-24 06:44 GMT   |   Update On 2018-10-24 06:44 GMT
பல்வேறு வகையான பொங்கலை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் புளிப்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.

ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும்.

புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

விசில் போனவுடன் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான புளிப்பொங்கல் ரெடி.

குறிப்பு: வடகம் வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News