லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை

Published On 2018-06-27 06:26 GMT   |   Update On 2018-06-27 06:26 GMT
பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. பச்சை பட்டாணியில் வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :  

பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்),
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :  

வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பட்டாணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் கடலை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினா, சூடான எண்ணெய் 1 டீஸ்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான பச்சை பட்டாணி வடை ரெடி.

குறிப்பு - இந்த வடைக்கு மாவு அரைக்கும் போது கொரகொரப்பாக அரைத்தால் தான் மொறுமொறு என்று சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News