சமையல்

தித்திப்பான ரவை இனிப்பு பொங்கல்

Published On 2023-05-11 05:54 GMT   |   Update On 2023-05-11 05:54 GMT
  • ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
  • இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை - 1/4 படி

அச்சு வெல்லம் - 12

நெய் - 5 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 12

காய்ந்த திராட்சை - 12

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

செய்முறை:

ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.

வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.

இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.

ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.

Tags:    

Similar News