சமையல்

எலும்புகளுக்கு வலுசேர்க்கும் தினை தேன் உருண்டை

Published On 2023-09-28 06:29 GMT   |   Update On 2023-09-28 06:29 GMT
  • தினை சிறுதானியங்களில் முக்கியமானது.
  • உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள்.

தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம். இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருட்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.

இன்று குழந்தைகளும் கால்சியம் பற்றாக்குறை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு இயல்பாகவே மெனோபாஸ் காலங்களில் கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். தற்போது இது அதிகரித்துவருகிறது. தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாகவே உண்டு என்பதால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமை அடையும். பற்கள் உறுதியாகும்.

வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது. இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்பார்வையும் கூர்மை அடையும்.

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு - அரை கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

நெய் - கால் கப்

தேன் - கால் கப்.

செய்முறை:

தினை, பொட்டுக்கடலை மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் கலந்து பிசைந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு உருக்கிய நெய் சேர்த்து பிசைந்து எலுமிச்சை அளவுக்கு சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இப்போது சுவையான தினை தேன் உருண்டை தயார்.

Tags:    

Similar News