பெண்கள் உலகம்

சத்து நிறைந்த கம்பு பாலக் ரொட்டி

Published On 2019-01-30 10:25 IST   |   Update On 2019-01-30 10:25:00 IST
கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 1 கப்
ப. மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.

நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News