பொது மருத்துவம்

சிறிய பழக்கங்கள் ஏற்படுத்தும் பெரிய மாற்றங்கள்

Published On 2026-03-04 11:57 IST   |   Update On 2026-03-04 11:57:00 IST
  • மனநிலையை மாற்றும்.
  • நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

* காபி, டீ பருகுவதற்கு முன் தண்ணீர் குடித்தல்

-உடலின் நீர்ச்சத்து மற்றும் ஆற்றலை மீட்டெடுக்கிறது.

* இன்று இரவே நாளைய திட்டத்தை அமைத்தல்

-மறுநாள் காலையில் மன அழுத்தத்தை குறைக்கிறது.

* தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துதல்

-மனக்குழப்பம் ஏற்படாமல் தடுக்கும்.

* காலையில் எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துதல்

-ஒழுக்கத்தையும், புத்துணர்ச்சியான தொடக்கத்தையும் குறிக்கிறது.

* மெதுவாக உணவருந்துதல்

-குடல் ஆரோக்கியத்தை காக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

* சிறிய தொகையை சேமித்தல்

-திட்டமிட்டு செலவிட தூண்டும்.

* தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்தல்

-மனநிலையை மாற்றும். செரிமானம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும்.

* கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல்

-உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது.

* அதிகாலையில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல்

- ஹார்மோன்கள் மற்றும் தூக்கச் சுழற்சியை சமநிலைப் படுத்துகிறது.

* தினமும் 5 பக்கங்கள் வாசித்தல்

- அறிவும் சேர்ந்து வளரும்.

* உணவருந்தும்போது கைப்பேசியை தவிர்த்தல்

-ஜீரணத்தையும், விழிப்புணர்வையும் மேம்படுத்தும்.

* தினமும் பயன்படுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

-அமைதியான சூழல் நிலவும். மனமும் அமைதியாகும்.

* கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு சிறிது இடைவேளை எடுத்தல்

-உறவுகளையும், மன ஆற்றலையும் காக்கும்.

* உறங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்தல்

-நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

* செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தல்

- மனம் திருப்தி அடையும்.

Tags:    

Similar News