பொது மருத்துவம்

பருவ காலங்களில் தவிர்க்க கூடாதவை....!

Published On 2023-11-27 09:00 GMT   |   Update On 2023-11-27 09:00 GMT
  • பருவங்களில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
  • புதிய விளை பொருட்களை சாப்பிடும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.

அந்தந்த பருவ காலங்களில் அதிகம் விளையும் பொருட்களை அவசியம் உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவங்களில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும், அல்லது நோயின் தீவிரத்தை குறைக்கும். உணவு பிரியராக இருப்பவர்கள் அந்தந்த சீசனில் கிடைக்கும் புதிய விளை பொருட்களை சாப்பிடும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.

கம்பு

தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த உதவும். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இதயம்சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த நோய்களை தடுக்க உதவும்.

சாப்பிடும் முறை:

அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக இந்த உணவை சேர்க்கலாம். கோதுமை மாவுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

மழை, குளிர் கால சீசனின் போது கம்பை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். அது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

எள்

தாமிரம், மாங்கனீசு, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம் போன்றவை நிரம்ப பெற்றது.

கல்லீரலை பாதுகாக்க உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எள்ளில் சீசமின் மற்றும் செசமோலின் ஆகிய இரண்டு தனித்துவமான பொருட்கள் உள்ளன. அவை உடலில் கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டவை.

சாப்பிடும் முறை:

மாவு ரொட்டிகள், சட்னிகள், சாலடுகள் மீது தூவி சாப்பிடலாம்.

மக்காச்சோளம்

பெருலிக் அமிலம், கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை நிரம்ப பெற்றது.

இது சிறந்த புரோபயாடிக் பண்புகளை கொண்அது. செரிமானத்துக்கு உதவும். வளர்ச்சிதை மாற்றத்தை எளிதாக்கும். உடல் எடை குறைப்புக்கு வித்திடும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கவும் உதவும்.

ரத்த சோகையை தடுக்க உதவும். உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகளையும் உள்ளடக்கியது.

சாப்பிடும் முறை:

வேகவைத்த சோளத்தை சாலட்டுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.

கோதுமை மாவுக்கு பதிலாக சோளமாவை பயன்படுத்தலாம்.

செரிமானத்திற்கு உதவுவதில் இருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது வரை மக்காச்சோளம் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

பீட்டா கரோட்டின் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் கொண்டது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

இரும்பு, கால்சியம், செலினியம், உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.

சாப்பிடும் முறை:

உடலுக்கு நன்மை பயக்கும் பீட்டா கரோட்டின் உறிஞ்சுதலை அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்ப்பது சிறந்தது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பருவக்காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவுப்பொருள். இது சுவையுடன் ஆரோக்கியமான நன்மைகளையும் வழங்கக்கூடியது.

Tags:    

Similar News