லைஃப்ஸ்டைல்

உங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க

Published On 2019-01-19 07:50 GMT   |   Update On 2019-01-19 07:50 GMT
நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது. உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் பாலைத் தவிர மற்ற கால்சியம் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது.

உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் பாலைத் தவிர மற்ற கால்சியம் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உதவும். பாலைத் தவிர வேற எந்த பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

சோயா பால்

உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் அதற்கு பதிலாக நீங்கள் சோயா பால் அருந்தலாம். பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. 100 மில்லி லிட்டர் சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இதில் பாலில் உள்ள அளவிற்கு சமமான அளவாகும்.



கேழ்வரகு

மற்ற தானியங்களை ஒப்பிடும் போது கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. அரிசியில் இருக்கும் கால்சிய அளவை விட 30 மடங்கு அதிகமாகவும், 10 மடங்கு நார்ச்சத்து அதிகமாகவும் கொண்டுள்ளது. மேலும் இதில் நிறைய நுண்ணிய ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இது பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் உணவாக இருந்து வருகிறது. ராகி மாவு, ராகி தோசை, ராகி ரொட்டி போன்ற வகையில் இதை உணவில் சேர்க்கலாம். நீங்கள் எடையை குறைக்க நினைத்தாலும் அதற்கும் இது ஒரு சிறந்த உணவாக அமையும்.

தட்டாண் பயிறு

தட்டாண் பயிற்றில் நிறைய கால்சியம் சத்து உள்ளது. இதில் சூப் செய்தோ, வேக வைத்து சாலட் உடன் சேர்த்தோ சாப்பிடலாம். தட்டாண் பயிறு குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் காணாமல் போகும்.

அத்தி பழம்

அத்தி பழத்தை நீங்கள் உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகவோ சாப்பிடலாம். இதில் நிறைய கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துகள் நமது சீரண சக்திக்கு உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸ்

காலையில் கண்டிப்பாக ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் கால்சியம் சேர உதவும். எனவே கால்சியம் உணவுகளும் ஆரஞ்சு ஜூஸூம் அவசியமாகிறது.
Tags:    

Similar News