லைஃப்ஸ்டைல்

இதயத்தை பாதிக்கும் பற்கள்

Published On 2018-11-08 02:00 GMT   |   Update On 2018-11-08 02:00 GMT
பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
பற்களின் ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3600 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. அதனால் பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், அது தொடர்பாக சிகிச்சை பெறுபவர்கள் வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உணவில் உப்பை குறைவாக சேர்த்து கொள்வது, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவைகளும் அவசியமானவை’’ என்கிறார்கள், பல் மருத்துவர்கள்.

Tags:    

Similar News