பெண்கள் உலகம்

எப்போதும் சோர்வாக இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2018-11-02 08:29 IST   |   Update On 2018-11-02 08:29:00 IST
இரவில் சரியாக தூக்கம் இல்லை என்றால் சோர்வு ஏற்படும். எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

தூங்குவதற்கு உபயோகப்படுத்தும் தலையணையை குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.

மெத்தையை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றியமைக்க வேண்டும்.

படுக்கை அறையில் நிலவும் வெப்பநிலையும் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அங்கு மிதமான வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு பொழுதில் கண்களில் அதிக வெளிச்சம்படக்கூடாது. செல்போனில் இருந்து உமிழப்படும் வெளிச்சம் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனின் உருவாக்கத்தை தடுத்துவிடும்.

அதனால் படுக்கை அறைக்குள் செல்போனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

மதுப்பழக்கமும் தூக்கத்தை தடுத்து சோர்வை ஏற்படுத்திவிடும். மதுக்குடிக்கும்போது அதிலிருக்கும் ஆல்கஹால் தூக்கத்தை தூண்டும் வகையில் செயல்படும். சில மணி நேரங்களிலேயே எதிர்மறையாக செயல்பட்டு தூக்கத்தை தடுத்து சோர்வை உண்டாக்கிவிடும்.

அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியமானது. அது சோர்வை விரட்டி உடலை புத்துணர்ச்சிக்குள்ளாக்கும்.

தூங்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யக்கூடாது. 
Tags:    

Similar News