லைஃப்ஸ்டைல்

இந்த நோய்கள் இருக்கா.... அப்ப பூண்டு சாப்பிடாதீங்க...

Published On 2018-10-24 08:31 GMT   |   Update On 2018-10-24 08:31 GMT
உடலில் சில நோயின் அறிகுறி இருப்பவர்கள் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. எந்த நோய் உள்ளவர்கள் பூண்டை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால் உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை  குறைக்க செய்கிறது.

வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக்கை  அதிகப்படுத்தும்.

கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகள்  உள்ளது.

அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளப்போகும் நபர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்து விடுவது நல்லது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News