பெண்கள் உலகம்
கணையத்தினை காக்கும் சில உணவுகள்
கணையம் வீக்கம் அடையும் பொழுது அதிகவலி, ஜுரம், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படுகின்றது. இப்பொழுது நாம் கணையத்தினை காக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.
வயிற்று வலி, நெஞ்சுவலி என வயிறு சம்பந்தமாக பல்வேறு வலிகளை பற்றி அறிந்திருப்போம். சிலவற்றினை அனுபவித்து சிகிச்சையும் பெற்றிருப்போம், கணையம் எனப்படும் பான்கிரஸ் வலியினை சிலர் அனுபவித்து இருப்பர். சிலருக்கு பிறரை பார்த்த அனுபவம் இருக்கும். இதன் வலி மிகக் கடுமையாக இருக்கும். கணையம் மிக முக்கிய ஹார்மோனை இன்சுலின் சுரப்பதோடு மேலும் பல முக்கிய உடல் நலனுக்கான வேலைகளைச் செய்கின்றன.
* பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றினை அன்றாடம் உணவில் சேருங்கள்.
* பசலைக்கீரைக்கு கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கொழுப்பு அதிகம் இல்லாத தயிர், குடலுக்கு நல்ல பாக்டீரியாவினை அளிக்கின்றது. குடல், செரிமானம் இவற்றுக்கு உதவியாய் இருக்கின்றது. கணையத்தினை பாதுகாக்கின்றது.
காளான்: இதிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவை கணைய பாதுகாப்பிற்கு ஏற்றவை.
சர்க்கரை வள்ளி கிழங்கு: நிதானமாக சர்க்கரையினை வெளி விடும் தன்மையால் கணையத்திற்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கின்றது.
* சரி, கணைய வீக்கம் ஏற்படக் காரணம் என்ன என்பதனை அறிவோம்.
பித்தப்பையில் கற்கள், மது பழக்கம் இவை இரண்டும் கணைய வீக்கத்திற்கு முக்கிய காரணம் ஆகின்றன. மேலும் ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தாலும் சில வகை மருந்துகளும், சில வகை கிருமி தாக்குதல்களும் கணைய வீக்கத்தினை ஏற்படுத்தும். நீண்ட கால கணைய வீக்கம் நிரந்தரமாய் கணையத்தினை பாதித்துவிடும்.
மது அருந்துபவர்கள் மது அருந்துவதனை நிறுத்தி விட்டாலே பாதிக்கு மேல் பிரச்சினைகள் குறையும். கூடவே புகை பிடிப்பதனையும் நிறுத்துவது மிகவும் நல்லது.
இந்த வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். திரவ உணவு சூப், ஜூஸ் போன்றவை வீக்கத்தினை குறைக்க உதவும். மேலும் அதிக கொழுப்பு இல்லாத உணவு மற்றும் சிறிய அளவில் அடிக்கடி உண்பது ஜீரண மண்டலத்திற்கும் உதவியாய் இருக்கும்.
கணைய குழாய், பித்தப்பை குழாய் இவை கற்களால் அடை பட்டால் திடீரென ஏற்படும் வலிக்கு மிக அவசர சிகிச்சை தேவைப்படும். மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது இருக்கும். சில நாட்களில் இந்த வலி கட்டுப்படும். சில காலம் தொடரும். இந்த பாதிப்பு 3-6 வாரங்கள் வரை நிதானமாகவே ஆறும்.
மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் கணைய பாதிப்பு அவர்களின் ஆயுள் காலத்தினைக் கூட குறைத்து விடும்.
* மேல் வயிற்று வலி, வயிற்று வலி பின் முதுகு வரை செல்லுதல்.
* சாப்பிட்ட பிறகு அதிக வலி, ஜூரம், வேக நாடி துடிப்பு.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வயிற்றினைத் தொட்டாலே வலி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கணையம் வீக்கம் அடையும் பொழுது அதிகவலி, ஜுரம், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படுகின்றது. இது மருத்துவ அவசர சிகிச்சைக்கான பாதிப்பு ஆகும். இப்பொழுது நாம் கணையத்தினை காக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.