லைஃப்ஸ்டைல்

சிறுதானியமும் அதன் நன்மைகளும்

Published On 2018-07-22 03:50 GMT   |   Update On 2018-07-22 03:50 GMT
எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும். எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

திணை - இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.

குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.
Tags:    

Similar News