குழந்தை பராமரிப்பு

மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

Update: 2023-01-31 07:18 GMT
  • நண்பர்கள் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
  • நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்.

பலரது வாழ்வில் அவர்கள் அதிக நேரம் செலவழிப்பது நண்பர்களுடன்தான். அதனால் நண்பர்கள் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு...

நீ இல்லாத இடத்தில், உன்னைப் பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றித் தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு கஷ்டம் வந்தபோது கை கொடுப்பவர்கள், நல்ல நட்புறவை பேணுபவர்கள்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். அப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கு துணையாய் நிற்பவர்களை, ஒருபோதும் உதாசீனப்படுத்தாதீர்கள்.

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். அதனால் நல்லதை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.

தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். அதேசமயம், அறிவில் கூர்மையான, அன்பில் நிறைவான நண்பர்களை சேர்த்து கொள்வது அவசியம்.

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு.

நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்.

Similar News