பெண்கள் உலகம்

பிள்ளைகளுக்கு பொம்மைகள் தான் தோழி

Published On 2018-06-08 07:18 IST   |   Update On 2018-06-08 07:18:00 IST
இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
குழந்தைகள் மட்டுமல்ல மேஜிக், சமய சடங்குகள், கல்வியின் செய்முறை விளக்கம், மாதிரி உருவாக்கம் என அனைத்திற்கும் பொம்மைகள் உபயோகிக்கிறோம்.

பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.

ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.

பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.

இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம். 
Tags:    

Similar News