பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

Published On 2018-05-17 08:12 IST   |   Update On 2018-05-17 08:12:00 IST
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை முதலில் மனதில் இருந்து தூர தூக்கி எறியுங்கள்; ஏனெனில் நோய்களை உண்டாகாமல் தடுக்க போடப்படும் தடுப்பூசிகள் என்றும் நோயை ஏற்படுத்துபவையாக இருக்க முடியாது.

ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால் போதும் என் குழந்தை 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்துவிடும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அது தவறு. குழந்தையை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, பாசம் காட்டி வளர்க்க வேண்டும். தடுப்பூசிகள் குழந்தைகளின் வாழ்வின் முதல் கட்டத்தை நோய் நொடியற்றதாக, ஆரோக்கியமானதாக மாற்றவே உதவும்.

மேலும் ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவது அல்லது நோய்கிருமிகள் தாக்கிய தடுப்பூசியை பயன்படுத்துவது போன்றவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி புதிது தானா என்பதை பெற்றோரானா நீங்கள் சோதித்த பிறகே, குழந்தைக்கு போட அனுமதிக்க வேண்டும்.
Tags:    

Similar News