வழிபாடு

நவராத்திரியில் சிறப்பிக்கப்படும் `ஒன்பது'

Published On 2023-10-18 05:59 GMT   |   Update On 2023-10-18 05:59 GMT
  • ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவே நவராத்திரி
  • ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, நவராத்திரி" என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது.. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

 இசை

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-

முதல் நாள் - மிருதங்கம்

இரண்டாம் நாள் - புல்லாங்குழல்

மூன்றாம் நாள் - வீணை

நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்

ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்

ஆறாம் நாள் - பேரி

ஏழாம் நாள் - படகம்

எட்டாம் நாள் - கும்மி

ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

 மங்கலப்பொருள்

நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-

முதல் நாள் -புனுகு

இரண்டாம் நாள் - ஜவ்வாது

மூன்றாம் நாள் - கஸ்தூரி

நான்காம் நாள் - அரகஜா

ஐந்தாம் நாள் - சந்தனம்

ஆறாம் நாள்- குங்குமம்

ஏழாம் நாள்-சாந்து

எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்

ஒன்பதாம் நாள் மை

 தியானம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-

முதல் நாள் - நீலாயதாட்சி

இரண்டாம் நாள் - காமாட்சி

மூன்றாம் நாள் - மீனாட்சி

நான்காம் நாள் - விசாலாட்சி

ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி

ஆறாம் நாள் - ராட்சி

ஏழாம் நாள் - பத்மாட்சி

எட்டாம் நாள் - வனஜாட்சி

ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

 கோலம்

நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-

முதல் நாள் - அரிசி மாவு கோலம்

இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்

மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்

நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்

ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்

ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்

ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்

எட்டாவது நாள் - காசுகளை கொண்டு தாமரைப் பூ கோலம்

ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளை கொண்டு ஆயுதங்களை கோலமாக அமைக்க வேண்டும்.

 விளையாட்டுப் பொருட்கள்

நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

முதல் நாள் - சோழி

இரண்டாம் நாள் - குன்றிமணி

மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்

நான்காம் நாள் - கிளிஞ்சல்

ஐந்தாம் நாள் - மரச்சொப்பு

ஆறாம் நாள் பொம்மை

ஏழாம் நாள் - அம்மானைக் காய்

எட்டாம் நாள் - பந்து

ஒன்பதாம் நாள் - கழற்சிக் காய்

 பூக்கள்

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

முதல் நாள் - மல்லிகைப் பூ மாலை

இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை

மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை

நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை

ஐந்தாம் நாள் - பாரிஜாதப் பூ மாலை

ஆறாம் நாள் - செம்பருத்திப் பூ மாலை

ஏழாம் நாள் - தாழம்பூ மாலை

எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை

ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

 பெண் வழிபாடு

நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும். அதன் விவரம்:-

முதல் நாள் - பாலா

இரண்டாம் நாள் - குமாரி

மூன்றாம் நாள்- கன்னிகை

நான்காம் நாள் - தேவதை

ஐந்தாம் நாள் - பிரவுடா

ஆறாம் நாள் - முத்து

ஏழாம் நாள் - சுமங்கலி

எட்டாம் நாள் - தருணீ

ஒன்பதாம் நாள் - மாதா

நைவேத்தியம்

முதல் நாள் - சுண்டல்

இரண்டாம் நாள் - வறுவல்

மூன்றாம் நாள் - துவையல்

நான்காம் நாள் - பொரியல்

ஐந்தாம் நாள் - அப்பளம்

ஆறாம் நாள் - வடகம்,

ஏழாம் நாள் - சூரணம்

எட்டாம் நாள் - முறுக்கு

ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

 பழங்கள்

நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

முதல் நாள் - வாழைப்பழம்

இரண்டாம் நாள் - மாம்பழம்

மூன்றாம் நாள் - பலாப்பழம்

நான்காம் நாள் - கொய்யாப்பழம்

ஐந்தாம் நாள்- மாதுளம் பழம்

ஆறாம் நாள் - நாரத்தைப் பழம்

ஏழாம் நாள் - பேரீச்சம் பழம்

எட்டாம் நாள் - திராட்சைப் பழம்

ஒன்பதாம் நாள் - நாவல் பழம்

 ராகங்கள்-9

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழி பட வேண்டும். அதன் விவரம்:-

முதல்நாள்- தோடிராகம்

இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்

மூன்றாம் நாள் - காம்போதி ராகம்

நான்காம் நாள் - பைரவி ராகம்

ஐந்தாம் நாள் - வராளி ராகம்

ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்

ஏழாவது நாள் - பிலஹரி ராகம்

எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்

ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

 9 வகை சுண்டல்

நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஒரு நைவேத்தியம் படைப்பது போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலை அம்பாளுக்கு படைத்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும். அதன் விவரம்:-

முதல் நாள் - வெள்ளைக் கடலை சுண்டல்

இரண்டாம் நாள் - காராமணி சுண்டல்

மூன்றாம் நாள் - மொச்சை சுண்டல்

நான்காம் நாள் - பச்சைப் பட்டாணி சுண்டல்

ஐந்தாம் நாள் - வேர்க்கடலை கண்டல்

ஆறாம் நாள் - பச்சைப்பயறு சுண்டல்

ஏழாம் நாள் - கொண்டைக் கடலை சுண்டல்

எட்டாம் நாள் - மொச்சைப் பயறு சுண்டல்

ஒன்பதாம் நாள் வேர்க்கடலை கண்டல்

சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இது போன்ற நவதானிய கண்டல்களை செய்து சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற நவதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 சித்ரான்னம்

விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்...

முதல் நாள் - வெண் பொங்கல்

இரண்டாம் நாள் - புளியோதரை

மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

நான்காம் நாள் - கதம்ப சாதம்

ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்

ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

எட்டாம் நாள் - பாயசம்

ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

சிறு பெண் வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு:-

முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்

இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) - மன மகிழ்ச்சி உண்டாகும் ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்

மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை,

நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்

ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்

ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்.

எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்

ஒன்பதாம் நாள்- 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

Tags:    

Similar News