ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.3.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்

Published On 2026-03-03 07:36 IST   |   Update On 2026-03-03 07:36:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

ரிஷபம்

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மிதுனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

கடகம்

பிரச்சனைகள் அகலும் நாள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

கன்னி

வருமானம் திருப்தி தரும் நாள். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

துலாம்

வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் ரீதியாகப் பயணம் உண்டு.

விருச்சிகம்

வளர்ச்சி மேலோங்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

தனுசு

வரவும், செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனமாற்ற சிந்தனை மேலோங்கும்.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. பயணங்களை தள்ளி வைப்பீர்கள்.

கும்பம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

மீனம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

Tags:    

Similar News