வழிபாடு

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Update: 2023-05-30 05:52 GMT
  • ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.
  • 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நேரடி இலவச தரிசனத்தில் 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தர்கள் வெளியில் உள்ள வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.

இவர்களில் 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News