கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: முதல் இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து

Published On 2024-02-16 09:20 GMT   |   Update On 2024-02-16 09:20 GMT
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
  • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

துபாய்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

Tags:    

Similar News