டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
உமேஷ் யாதவ் வீசிய 15-வது ஓவரில் டேவிட் வார்னர் 4 பவுண்டரிகளை விளாசினார். உமேஷ் யாதவ் 2 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
முகமது சிராஜ் வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் லபுசேன் கை விரலில் அடிப்பட்டது. பந்து பட்ட வேகத்தில் பேட்டை கீழே போட்டுவிட்டு வலியால் துடித்தார்.
BEAUTY of Test Match ♥️#WTCFinal #WTC2023 #INDvsAUS #Siraj #WTC2023Final @mdsirajofficial pic.twitter.com/dnhL1uEvPY
— Shikhar Jaiswal (@shikhar_12221) June 7, 2023
இந்த போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் 50 -வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 9 சதம் 1 இரட்டை சதம் உள்பட 3379 ரன்கள் அடித்துள்ளார்.
முகமது சிராஜ் வீசிய நான்காவது ஓவரின் 4வது பந்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். 10 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை.
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.
அணிகள்:
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லாபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஸ்காட் போலண்ட்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.