கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா திரும்பினார் விராட் கோலி: உற்சாகத்தில் ரசிகர்கள்

Published On 2024-03-17 13:10 IST   |   Update On 2024-03-17 13:14:00 IST
  • சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆடவில்லை.
  • தற்போது விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. கோலி-அனுஷ்கா தம்பதிக்கு லண்டனில் 2-வது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் அவர் ஆடவில்லை. 2-வது குழந்தை பிறந்ததால் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது தெரிய வந்தது. இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் ஆடுவாரா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். 2-வது குழந்தை பிறந்த பிறகு அவர் முதல் முறையாக தோன்றினார்.

விராட் கோலி நாடு திரும்பியுள்ள நிலையில், ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். வரும் 19-ந்தேதி அவர் பெங்களூரு வந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இணைந்து கொள்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News