கிரிக்கெட்

உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணி இல்லை- முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து

Published On 2024-05-23 16:52 GMT   |   Update On 2024-05-23 16:52 GMT
  • 2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
  • இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாக இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.

இது அவர் கூடியதாவது:-

இந்தியா கணிக்கக்கூடிய அணியாகும். இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆம் அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராக இல்லை. அவர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இல்லை.

என்று டேவிட் லாய்ட் கூறினார். 

Tags:    

Similar News