கிரிக்கெட்

யுஸ்வேந்திர சாஹல்

இந்திய டெஸ்ட் அணியில் சாஹல் இடம் பெறுவார்- இங்கிலாந்து முன்னாள் வீரர் நம்பிக்கை

Published On 2022-06-28 08:27 GMT   |   Update On 2022-06-28 08:27 GMT
  • டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது.
  • ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் சாஹல் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 61 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டும் டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2022 சிறந்த பந்து வீச்சாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது விளையாடி வரும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்நிலையில் சாஹல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்வான் கூறியதாவது:-

ஸ்வான்

சாஹாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விருப்பம் என்றால் உடனடியாக சேர்த்துக் கொள்வேன். இதை நான் சாஹலுடன் அமர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் உலகின் சிறந்த ஸ்பின்னர் என்று நான் நம்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் லெக்-ஸ்பின் வீசும்போது குறிப்பாக பனி மற்றும் ஈரமாக இருக்கும் போது அவர் சிறப்பாக செயல்படுவார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது. இங்கிலாந்து பரபரப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறது. மெக்கலத்தின் நெறிமுறைகள் இந்திய அணியிலும் உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகளிலும் பரவியிருக்கும் என்று நம்புகிறேன். இது பார்வையாளர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News