null
- சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
- கில் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்திய அணியின் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். 3 வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் தவிர மற்றொரு காரணத்திற்காகவும் கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவரையும் சாரா டெண்டுல்கர் மற்றும் சாரா அலிகான் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக, சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்ததாகவும் மேலும் சிலர் அதை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்ததாகவும் நெட்டிசன்கள் குழப்பி வந்தனர்.
முன்னதாக, சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அனைவராலும் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் தங்கள் டேட்டிங் வதந்திகள் குறித்து மூவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். அதே வேளையில், அவர் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பிரிந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. சாரா டெண்டுல்கருடனான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில், சாரா கானும் கில்லும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். மற்றும் அவர்களின் சமீபத்திய நடவடிக்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.