கிரிக்கெட்

உலககோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்: சிகிச்சைக்காக லண்டன் புறப்படுகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்?

Update: 2023-03-23 11:43 GMT
  • பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார்.
  • ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார்.

மும்பை:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் தொடக்கத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். அணியின் பேட்டிங் வரிசையே ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்தது.

2011ம் ஆண்டுக்கு பின் ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணிக்கு இந்த முறை மீண்டும் சொந்த மண்ணில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்காக தற்போது இருந்தே இந்திய அணி திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

சற்று 50 கிரிக்கெட்டிற்கான இந்திய அணியின் வழக்கமாக 4வது இடத்தில் விளையாடுவது ஷ்ரேயாஸ் ஐயர் தான். கடந்தாண்டு அவர் தான் அதிக ரன்களை இந்தியாவுக்காக அடித்திருந்தார். விரைவில் அவர் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கோரி வரும் சூழலில் இந்தியாவின் திட்டத்தில் இருந்தே அவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகுவலி பிரச்சினைக்காக லண்டன் புறப்படவுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து பழைய ஃபார்முக்கு வருவதற்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரை முடித்தவுடனேயே உலகக்கோப்பைக்கான திட்டத்தில் இந்திய அணி குதிக்கவுள்ளது. இப்படி இருக்கையில் ஷ்ரேயாஸ் ஐயரால் சரியான நேரத்தில் இந்திய அணியுடன் இணையமாட்டார். எனவே அவரின் 4வது இடத்தை இனி சூர்யகுமார் யாதவ் தான் பார்த்துக் கொள்ளவிருக்கிறார். 50 ஓவர் ஃபார்மெட்டில் இன்னும் ஃபார்முக்கு வராத சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரவுள்ளதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Tags:    

Similar News