கிரிக்கெட்

திறமையின் உச்சம்.. அறிமுக போட்டியில் விக்கெட் எடுத்த ரிங்கு சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்

Published On 2023-12-20 03:13 GMT   |   Update On 2023-12-20 03:13 GMT
  • தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபாரமாக ஆடினர். ஹென்ரிக்ஸ் - டோனி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.

அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்காததால் கேஎல் ராகுல் ரிங்கு சிங்குக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

ரிங்கு சிங் பந்து வீச்சில் டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் திறமையின் உச்சம் என பாராட்டி வருகின்றனர். ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

Tags:    

Similar News