கிரிக்கெட்

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

Published On 2022-09-24 10:45 GMT   |   Update On 2022-09-24 10:45 GMT
  • 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
  • பாண்டியாவிற்கு பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை அருமையாக பினிஷிங் செய்து கொடுத்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பலத்த மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

அதன்படி இந்திய அணி சேசிங் செய்த போது அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் முன்கூட்டியே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை அவர் களமிறங்காமலே போய்விட்டார். அதேவேளையில் பாண்டியாவிற்கு பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை அருமையாக பினிஷிங் செய்து கொடுத்தார்.

ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:-

ரிஷப் பண்ட்டை களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன்.

அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார் என தினேஷ் கார்த்திகை ரோகித் சர்மா பாராட்டினார்.

Tags:    

Similar News