கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை 2024: 50 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளராக மாறிய சாய் கிஷோர்

Published On 2024-03-03 12:40 GMT   |   Update On 2024-03-03 12:40 GMT
  • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிகபடச்சமாகவே ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 50 விக்கெட்டுக்குள் கடந்த ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தியுள்ளார். நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் கிஷோர் 6 முறை 4 விக்கெட்டுகளும், 3 முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 53 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

Tags:    

Similar News