கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம்பெறுவாரா? டிராவிட் பதில்

Published On 2022-10-05 07:52 GMT   |   Update On 2022-10-05 07:52 GMT
  • பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம்.
  • அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

இந்தூர்:

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்பட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

அவரது இடத்தில் மாற்று வீரர்களான முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தார். இது தொடர்பாக டிராவிட் கூறியதாவது:-


பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை.

அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும்.

நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார். 

Tags:    

Similar News