கிரிக்கெட்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீரருக்கு அபராதம் விதித்தது ஐசிசி

Published On 2022-09-09 19:37 GMT   |   Update On 2022-09-09 19:37 GMT
  • பாகிஸ்தான் வீரரும், ஆப்கானிஸ்தான் வீரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

துபாய்:

ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4-வது போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.

இதற்கிடையே, இப்போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் 19-வது ஓவரை அந்த அணியின் பரீட் அகமது வீசினார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி களத்தில் இருந்தார். 18.5 ஓவரை வீசியபோது ஆசிப் அலி அவுட்டானார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் அகமது கொண்டாடியபோது, ஆட்டமிழந்த ஆசிப் அலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு வீரர்களின் வாக்குவாதத்தால் மைதானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அகமது ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News