கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர் அறிவிப்பு: முதல் போட்டியில் பாகிஸ்தான்-வங்காளதேசம் மோதல்

Update: 2022-06-28 10:29 GMT
  • டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது.
  • டி20 முத்தரப்பு தொடர் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. 3-வது அணியாக வங்களாதேசம் விளையாடுகிறது.

டி20 தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி அக்டோபர் 7 மற்றும் 10-ம் தேதிகளில் எட்டாவது இடத்தில் இருக்கும் வங்கதேசம் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிகளுடன் விளையாடுகிறது.

இந்த டி20 முத்தரப்பு தொடர் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோதுகிறது.

அக்டோபர் 11 ஆம் தேதி பாகிஸ்தான் நியூசிலாந்தையும், அக்டோபர் 13 ஆம் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

டி20 முத்தரப்பு தொடர் அட்டவணை:

7 Oct – பாகிஸ்தான் வங்காளதேசம்

8 Oct – பாகிஸ்தான் v நியூசிலாந்து

9 Oct – வங்காளதேசம் v நியூசிலாந்து

11 Oct – நியூசிலாந்து v பாகிஸ்தான்

12 Oct – வங்காளதேசம் v நியூசிலாந்து

13 Oct – வங்காளதேசம் v பாகிஸ்தான்

14 Oct – இறுதி ஆட்டம் 

Tags:    

Similar News