கிரிக்கெட் (Cricket)

அருண் கார்த்திக் அதிரடி சதம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அபார வெற்றி

Published On 2023-06-24 18:37 IST   |   Update On 2023-06-24 18:51:00 IST
  • முதலில் ஆடிய சேப்பாக் அணி 159 ரன்களை எடுத்தது.
  • தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சேலம்:

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 79 ரன்கள் எடுத்தார். ஹரிஸ் குமார் 20 ரன்னும், ஜெகதீசன் 15 ரன்னும், சஞ்சய் யாதவ் 15 ரன்னும் எடுத்தனர்.

நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அருண் கார்த்திக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீ நிரஞ்சன் 24 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தனது அதிரடியை தொடர்ந்த அருண் கார்த்திக் சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்தில் 5 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், நெல்லை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அருண் கார்த்திக் 104 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Tags:    

Similar News