கிரிக்கெட்

சான்றிதழை பெற்றுக்கொண்ட ஜெய்ஷா

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நரேந்திர மோடி மைதானம்

Published On 2022-11-27 16:43 GMT   |   Update On 2022-11-27 16:43 GMT
  • அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
  • இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.

அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.

இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News