கிரிக்கெட் (Cricket)
null

முறைதான் ஒருமுறை தான் உன்னை பார்த்தால் அது வரமே.. டோனி வீடியோ வைரல்

Published On 2024-03-13 13:25 IST   |   Update On 2024-03-13 13:32:00 IST
  • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகிறது.
  • இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு அணியின் கேப்டன் எம்எஸ் டோனி ஆட்டோகிராப் போட்டார். நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பொறுமையாக நின்று அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டு மகிழ்ந்தார்.

இந்த வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என தலைப்பிட்டிருந்தது. இந்த வீடியோவுக்கு லைக்குகள், கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அவரை அருகில் நின்று பார்ப்பதற்கும் செல்பி எடுத்துக் கொள்ளவும் நிறைய ரசிகர்கள் தவம் கிடக்கும் நிலையில் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது உண்மையாகவே வரம்தான்.

Tags:    

Similar News