கிரிக்கெட்

ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் வெல்லும்- வாட்சன் கணிப்பு

Published On 2024-05-26 13:10 GMT   |   Update On 2024-05-26 13:10 GMT
  • சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
  • குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் உள்ளர். அதனால் எனது கணிப்பு கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும்.

இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News