கிரிக்கெட்

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி? வைரலாகும் புகைப்படம்

Published On 2024-03-28 15:37 GMT   |   Update On 2024-03-28 15:37 GMT
  • ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  • ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ரன்களை குவித்தது ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருந்தது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.


 

டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

அளவில் பெரிதாக காட்சியளிக்கும் சங்கிலி தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் அதன் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


Tags:    

Similar News