கிரிக்கெட்

பிளேஆஃப் சுற்றில் விராட் கோலி எப்படி?

Published On 2024-05-22 09:26 GMT   |   Update On 2024-05-22 09:26 GMT
  • 14 இன்னிங்சில் 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
  • இரண்டு அரைசதங்களுடன் 25.66 மட்டுமே சராசரி வைத்துள்ளார்.

ஐபிஎல் 2024 சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது.

ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக கெய்க்வாட் 583 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடினாலும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் மற்றும் ரன்விகிதம் அதிகமாக இருந்ததில்லை.

இதுவரை 14 பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். சராசரி 25.66 ஆகும். ஸ்டிரைக் ரேட் 120.31 ஆகும்.

தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் களம் இறங்குகிறது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனை மனதில் வைத்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி முந்தைய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து அணிக்கு தூணாக நிற்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விராட் கோலியும் அதே நிலையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News