கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா

Published On 2024-04-29 17:32 GMT   |   Update On 2024-04-29 17:32 GMT
  • கொல்கத்தா அணியின் பில் சால்ட் 68 ரன்களை குவித்தார்.
  • டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News