வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 3 நியூசிலாந்து வீரர்கள் விலகல்
- நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- பரபரப்பாக சென்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் நடந்த டி20 தொடரையும் அடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான ஆட்டத்தில் டிரா ஆனது.இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் 3 பேர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதன்படி சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாட்னர், வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி, மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளனர்.
ஹென்றி, ஸ்மித் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தனர். மிட்செல் சாடனர் முதல் போட்டிக்கு முன்பே காயத்தால் விளையாடாமல் இருந்தார்.
இவர்கள் விலகியது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.