கிரிக்கெட்

ஐபிஎல் 2024: கேதர் ஜாதவின் அடிப்படை விலை ரூ. 2 கோடி

Published On 2023-12-02 06:58 GMT   |   Update On 2023-12-02 06:58 GMT
  • இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
  • இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

மும்பை:

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

Tags:    

Similar News