கிரிக்கெட் (Cricket)

புதிய சாதனை படைக்கவிருக்கும் டோனி- இன்னும் 8 ரன்னே தேவை

Published On 2023-04-03 14:00 IST   |   Update On 2023-04-03 14:00:00 IST
  • 41 வயதான டோனி ஐ.பி.எல்.லில் அதிக போட்டியில் விளையாடியவா் என்ற சாதனையில் இருக்கிறார்.
  • 4 முறை சி.எஸ்.கே. கோப்பையை வென்று உள்ளது.

சென்னை:

ஐ.பி.எல். போட்டியின் வெற்றிகரமான கேப்டன் டோனி. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று உள்ளார்.

இதில் 4 முறை சி.எஸ்.கே. கோப்பையை வென்று உள்ளது. ரைசிங் புனே அணிக்கு கேப்டனாக பணி ஆற்றிய போதும் டோனி அந்த அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்தார்.

41 வயதான டோனி ஐ.பி.எல்.லில் அதிக போட்டியில் விளையாடியவா் என்ற சாதனையில் இருக்கிறார். அவர் 235 ஆட்டத்தில் விளையாடி உள்ளார். இந்த சீசனோடு டோனி ஐ.பி.எல்.லில் ஓய்வு பெறுகிறார்.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி 5 ஆயிரம் ரன்னை தொடுவாரா? என்ற எதிர் பார்க்கப்படுகிறது. அவர் 207 இன்னிங்சில் 4992 ரன் எடுத்து உள்ளார். சராசரி 39.30 ஆகும். அதிகபட்சமாக 80 ரன் எடுத்து உள்ளார். 24 அரை சதம் அடித்துள்ளார்.

5 ஆயிரம் ரன்னை எடுக்க டோனிக்கு இன்னும் 8 ரன்னே தேவை. இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது அவர் 5 ஆயிரம் ரன்னை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

5 ஆயிரம் ரன்னை எடுக்கும் 7-வது வீரர் என்ற பெருமையை டோனி பெறுவார். விராட் கோலி (6706 ரன்), தவான் (6284), வார்னா் (5937), ரோகித் சர்மா (5880), ரெய்னா (5528), டிவில்லியர்ஸ் (5162) ஆகியோர் வரிசையில் டோனி இணைகிறார்.

Tags:    

Similar News