கிரிக்கெட்

125 ரன்களுக்குள் அதிகமுறை ஆல் அவுட்- டெல்லியின் மோசமான சாதனையை சமன் செய்த பெங்களூர்

Published On 2023-04-07 09:51 GMT   |   Update On 2023-04-07 09:51 GMT
  • கொல்கத்தா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 123 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
  • பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் கொல்கத்தா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 123 ரன்னில் ஆல் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்னில் அதிகமுறை ஆல் அவுட் ஆன டெல்லி அணியின் சாதனையை பெங்களூர் அணி சமன் செய்துள்ளது. 15 முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது.

மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக 'ஆல் அவுட்' ஆன அணி என்ற மோசமான சாதனையையும் பெங்களூரு அணி படைத்துள்ளது.

Tags:    

Similar News