கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடர்: ஜேசன் ஹோல்டர் விலகல்

Published On 2024-05-26 18:09 GMT   |   Update On 2024-05-26 18:09 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்தது.

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஒபேத் மெக்காய், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

Tags:    

Similar News