கிரிக்கெட்
null

டி20-யில் 5-வது சதம்.. ஒரே போட்டியில் 2 பேரின் சாதனைகளை முறியடித்த ரோகித்

Published On 2024-01-17 16:18 GMT   |   Update On 2024-01-17 16:20 GMT
  • ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
  • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது. ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோகித் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் யாதவ், மேக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.

இந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்த போது ரோகித் மேலும் ஒரு சாதனையை படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் (1572 ரன்கள்) பிடித்தியுள்ளார். விராட் கோலி கேப்டனாக 1570 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News