லைவ் அப்டேட்ஸ்: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
லுங்கி இங்கிடி வீசிய மெதுவான பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசை பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யர் 77 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. விராட் கோலி 62 ரன்களிலும் ஷ்ரேயாஸ் 56 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.
கோலியை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐய்யர் அரை சதம் விளாசினார்.
பிறந்தநாளில் விராட் கோலி அரை சதம் விளாசினார்.
முதல் ரிவ்யூவை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி. விராட் கோலிக்கு பேட்டில் பட்டதாக ரிவ்யூ எடுக்கப்பட்ட நிலையில் அது 3-வது நடுவரால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகி\றது. விராட் கோலி 22 ரன்களிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்,
இந்திய அணி 5 ஓவர் முடிவில் 61 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரோகித் 40 ரன்களிலும் சுப்மன் கில் 12 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.
லுங்கி இங்கிடி வீசிய முதல் ஓவரில் இந்திய அணி 5 ரன்கள் எடுத்துள்ளது.