கிரிக்கெட்

லைவ் அப்டேட்ஸ்: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Published On 2023-11-05 08:05 GMT   |   Update On 2023-11-05 17:14 GMT
  • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
  • கொல்கத்தாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உலக கோப்பை தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. 

2023-11-05 15:13 GMT

இந்த ஆட்டத்தின் முடிவில் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

2023-11-05 15:11 GMT

அடுத்ததாக மாக்ரோ ஜான்சன்-14, கேஷவ் மகாராஜ்-7, காகீசோ ரநாவா- 6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

2023-11-05 15:10 GMT

தொடர்ந்து டேவிட் மில்லர் ஜடேஜாவின் விக்கெட்டில் வீழ்ந்தார்.

2023-11-05 14:08 GMT

முகமது சமி ஓவரில் வான் டெர் டுசென் ஆட்டமிழந்தார். தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

2023-11-05 14:06 GMT

ஜடேஜா பந்து வீச்சில் கிளாசன் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

2023-11-05 14:05 GMT

முகமது சமி ஓவரில் மார்க்ராம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2023-11-05 14:04 GMT

ஜடேஜா பந்து வீச்சில் பவுமா 11 ரன்னில் அவுட் ஆனார்.

2023-11-05 13:18 GMT

சிராஜ் பந்து வீச்சில் டி காக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2023-11-05 12:28 GMT

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.

2023-11-05 11:59 GMT

கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Tags:    

Similar News